tamilnadu

img

ம.பி. முதல்வர் ராஜினாமா செய்ய முடிவு

போபால்:
மத்தியப்பிரதேச முதல்வர் கமல் நாத், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்வதற்கு முன்பே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பாஜக வலையில் சிக்கி விலைபோயினர். 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். அவர்களில் முதலில் 6 பேரின் ராஜினாமாவைமட்டும் சபாநாயகர் ஏற்றார். மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களை வியாழனன்று ஏற்றதாக அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
சட்டமன்றத்தில் வெள்ளியன்று மாலை 5 மணிக்குள் அரசு மீதானநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திமுடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் கமல்நாத்செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் ஐந்து ஆண்டு காலம் ஆட்சிசெய்வதற்காக மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கினர். பாஜக எப்போதும் எனக்கு எதிராக சதி செய்துகொண்டே இருந்தது. எங்கள் 22 எம்எல்ஏக்களை அவர்கள் பெங்களூருவில் பிடித்து வைத்திருந்தனர். இந்த நம்பிக்கை மீறல், எனக்கு எதிரானது அல்ல, மத்தியப்பிரதேச மக்களுக்கு எதிரானது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாபியாக்கள் மீதுநடவடிக்கை எடுப்பதை பாஜக விரும்பவில்லை. பாஜக மத்திய பிரதேச மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன். பிற்பகலில் ஆளுநரை சந்தித்துராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளேன்என்று தெரிவித்தார்.

;